ரெடியா இருங்க மக்களே…!!! நாளை flipkart-ல் தள்ளுபடியுடன் விற்பனையாகும் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் போன்…!!!

ரெடியா இருங்க மக்களே...!!! நாளை flipkart-ல் தள்ளுபடியுடன் விற்பனையாகும் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் போன்...!!!

மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய மோட்டோரோலா போன் நாளை (ஏப்ரல் 9) பிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்நிலையில் flipkart-ல் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட் போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

8GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 22,999. 12GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட மாடலின் விலை ரூ. 24,999. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ. 2000 தள்ளுபடியும் உண்டு.எனவே நீங்கள் இந்த போனை ரூ.20,999க்கு வாங்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் அம்சங்கள்:

இந்த வகை ஸ்மார்ட் போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4nm சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.இந்த போன் மாலி G615 MC2 GPU கிராபிக்ஸ் கார்டையும் ஆதரிக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் போன் 6.7-இன்ச் முழு HD+ 10-பிட் OLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டிஸ்ப்ளே HDR10+ ஆதரவு, 120Hz புதுப்பிப்பு வீதம், 360Hz டச் சாம்ப்ளிங் வீதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு மற்றும் 4500 nits உச்ச பிரகாசம் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வருகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனில் 50MP சோனி LYT-700C பிரதான சென்சார் மற்றும் பின்புறத்தில் 13MP அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்ற 32MP கேமராவும் உள்ளது.இந்த புதிய மோட்டோரோலா போன் IP68 + IP69 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவுடன் வெளியிடப்பட்டது.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் USB டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பல சிறந்த அம்சங்களுடன் வருகிறது.இந்த போன் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும். இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 68W வேகமான சார்ஜிங் வசதியும் உள்ளது.இந்த போன் 5G, 4G VoLTE, Wi-Fi 6 802.11AX, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-C உள்ளிட்ட பல்வேறு இணைப்பு விருப்பங்களை ஆதரிக்கிறது.