கேமிங் பயனாளர்களே ரெடியா இருங்க...!!!ஏப்ரல் 10 இல் களமிறங்கவுள்ள புதிய Xiaomi ஸ்மார்ட் டிவி..!!!

Xiaomi நிறுவனம் ஏப்ரல் 10 ஆம் தேதி இந்தியாவில் Xiaomi QLED TV X Pro தொடரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களை கொண்டுள்ளது. Xiaomi QLED TV X Pro தொடர் மாடல்களின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.
Xiaomi QLED TV X Pro தொடர் அம்சங்கள்:
இந்த புதிய Xiaomi ஸ்மார்ட் டிவிகள் 4K தெளிவுத்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட பிரகாசத்துடன் வரும். இந்த புதிய டிவிகள் கேம் பூஸ்டர் பயன்முறையைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Xiaomi QLED TV X Pro தொடர் மாதிரிகள் 64GB சேமிப்பகத்துடன் வெளியிடப்படும். இந்த தொலைக்காட்சிகளில் OK Google குரல் தேடல், Google TV தளம் மற்றும் பெசல் லேல் வடிவமைப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களும் உள்ளன.தற்போது, Xiaomi QLED TV X Pro தொடர் மாடல்களின் சில அம்சங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
இந்த டிவிகளின் அனைத்து அம்சங்களும் விரைவில் வெளியிடப்படும். மேலும், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi X Series 50 Inch Ultra HD 4K ஸ்மார்ட் டிவி தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது Xiaomi X Series 50-inch Ultra HD 4K ஸ்மார்ட் டிவி Flipkart-ல் 33 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது, இதன் விலை ரூ. 29,999 மட்டுமே. மேலும் குறிப்பிட்ட சில வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ. 2000 தள்ளுபடியும் உண்டு.எனவே நீங்கள் இந்த டிவியை ரூ.27,999க்கு வாங்கலாம்.
Xiaomi X Series 50 Inch Xiaomi X Series அம்சங்கள்: Xiaomi X Series TV Ultra HD 4K டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த டிவியில் 3840 × 2160 பிக்சல்கள், 178-டிகிரி பார்வை கோணம் மற்றும் HDR 10 உள்ளிட்ட டிஸ்ப்ளே அம்சங்களும் உள்ளன.எனவே இந்த Xiaomi TV உங்களுக்கு சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
Xiaomi X Series 50-இன்ச் Ultra HD 4K ஸ்மார்ட் டிவி, குவாட்-கோர் செயலி (A55) உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேமிங் பயனர்களை ஈர்க்கும் வகையில் இது Mali G52 MC1 GPU கிராபிக்ஸ் அட்டையையும் கொண்டுள்ளது.
Xiaomi X தொடர் டிவி 94% DCPI-3 வண்ண வரம்பு, ALLM மற்றும் MEMC உள்ளிட்ட பல அற்புதமான அம்சங்களுடன் வருகிறது.
2 GB RAM மற்றும் 8 GB சேமிப்பகத்துடன் கூடிய Xiaomi X சீரிஸ் 50-inch Ultra HD 4K ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிவி பேட்ச்வால் மற்றும் கூகிள் டிவி ஓஎஸ்ஸில் இயங்குகிறது.Xiaomi ஸ்மார்ட் டிவி மாடலில் Vivid Picture Engine,Dolby Vision Time மற்றும் 6.5ms Response Time உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்த 50-இன்ச் Xiaomi ஸ்மார்ட் டிவி மாடல், Dolby audio, DTS-X மற்றும் DTS Virtual X உள்ளிட்ட ஆடியோ அம்சங்களுடன் 30W ஸ்பீக்கர்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan