Singapore news

YouTube செயலியில் தடங்கல் ஏற்பட்டதா?

நேற்றிலிருந்து (ஜூன் 22) Alphabet Inc நிறுவனத்தின் YouTube,YouTube TV சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது.

அதைப் பற்றி Downdetector.sg இணையத்தளம் தெரிவித்தது.

சிங்கப்பூர் நேரப்படி இன்று (ஜூன் 23) காலை 7 மணி வரை சேவைத் தடங்கல் தொடர்பாக Downdetector.sg பக்கத்தில் பலர் புகார் அளித்திருந்ததாக தெரிவித்தது.

சுமார் 13,000 க்கும் அதிகமானோர் YouTube சேவை தடங்கல் குறித்து புகார் அளித்திருந்தனர்.

சுமார் 3000 க்கும் அதிகமானோர் YouTube Tv சேவைத் தடங்கல் குறித்து புகார்கள் வந்ததாக தெரிவித்தது.

YouTube மற்றும் YouTube Tv சேவைகள் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.