குறைந்த விலையில் ஆல்வேஸ் ஆன் மோடில் சோலார் சார்ஜிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் வாட்ச்...!!!

இந்திய ஸ்மார்ட்வாட்ச் ஆர்வலர்களை கவரும் வகையில், சோலார் சார்ஜிங் வசதியில் கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 சீரிஸ் மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் சோலார் சார்ஜிங், 10ATM வாட்டர் ரேட்டிங், GPS இணைப்பு, மோனோக்ரோம் டிஸ்ப்ளே மற்றும் ஹெல்த் டிராக்கிங் போன்ற அம்சங்களுடன் இருப்பது இதன் தனி சிறப்பு.
பிரீமியம் ரக்கட் மாடலாக அறிமுகப்படுத்தப்படும் கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 மாடல்களின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை இங்கு காண்போம்.
இன்ஸ்டிங்க்ட் தொடர் மொத்தம் மூன்று மாடல்களில் கிடைக்கிறது. அவை
✨️ கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 – AMOLED
✨️ கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 – E
✨️ கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 – SOLAR
இந்த பதிப்புகள் அனைத்தும் 50mm, 45mm மற்றும் 40mm கேஸ்களில் கிடைக்கின்றன.
கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 AMOLED இன் சிறப்பம்சங்கள்:
இந்த ஸ்மார்ட் வாட்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மற்ற 2 மாடல்களும் மோனோகுரோம் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளன. மூன்று பதிப்புகளும் எப்போதும் இயக்கத்தில் இருக்கும் ஆதரவைக் கொண்டுள்ளன. மேலும் இவை சிலிகான் ஸ்ட்ராப் மெட்டீரியல் மற்றும் ஃபைபர் ரெய்ன்போர்ஸ்டு பாலிமர் கேஸ் மெட்டீரியலில் கிடைக்கின்றன.
ஒரு ரக்கட் மாடலாக இருப்பதால், இது 10ATM வாட்டர் ரேட்டிங்கை கொண்டுள்ளது. சோலார் வெர்சனில் 28 நாட்களில் பேக்கப் கிடைக்கும். மல்டி-பேண்ட் GPS கிடைக்கிறது. LED ஃபிளாஷ், 128 MB மெமரியில் கிடைக்கிறது. மேலும் இவை பிரீமியம் கடிகார அம்சங்களில் கிடைக்கின்றன.
எனவே, தானியங்கி பகல் சேமிப்பு நேரம், GPS நேர ஒத்திசைவு, சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரங்கள் ஆகியவற்றை தெளிவாக காட்டுகின்றன.
இதன் அம்சங்களைப் பார்க்கும்போது, ஹார்ட் ரேட் மானிட்டர், ஹார்ட் ரேட் எச்சரிக்கை, ஸ்லீப் டிராக்கர், மன அழுத்த மானிட்டர், ஸ்லீப் மானிட்டர் ஸ்லீப் கோச் மற்றும் பெண்களுக்கான ஹெல்த் டிராக்கர் வசதியும் உள்ளன.
கூடுதலாக இதில் பல்வேறு விளையாட்டு மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3E மாடல்
இது சோலார் வெர்ஷனில் 14 நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியை கொண்டுள்ளது.இது சூரிய ஒளி தெரியும் காட்சியைக் கொண்டுள்ளது. இது 10 ATM வாட்டர் ரேட்டிங் கொண்டுள்ளது.காட்சி மற்றும் பேட்டரி அம்சங்களைத் தவிர மற்ற அம்சங்கள் அனைத்தும் முந்தைய மாடலைப் போலவே உள்ளது.
இன்ஸ்டிங்க்ட் 3 அமோலெட் வெர்ஷன் 18 நாட்களில் பேட்டரி பேக்கப்பை கொண்டுள்ளது.
இதில் ஆல்வேஸ் ஆன் மாடில் 7 நாட்களில் பேக்கப்பை எதிர்பார்க்கலாம்.பேட்டரி சேவர் பயன்முறையில் 24 நாட்களுக்கு பேக்கப் ஐ எதிர்பார்க்கலாம். இது 4GB மெமரியில் கிடைக்கிறது.
விலை குறித்த விவரங்கள்:
40mm கேஸ் மற்றும் 45mm கேஸ் கொண்ட கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3E பதிப்பின் விலை ரூ.35,990. அதேபோல், கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 AMOLED பதிப்பின் 45mm கேஸ் ஸ்மார்ட் வாட்ச் இன் விலை ரூ.52,990 மற்றும் 50mm கேஸ் ஸ்மார்ட் வாட்ச் இன் விலை ரூ.58,990.கார்மின் இன்ஸ்டிங்க்ட் 3 சோலார் பதிப்பின் 45mm கேஸின் விலை ரூ.46,990 ஆகும்.
50mm ஸ்மார்ட் வாட்ச் இன் விலை ரூ. 52,990. இந்த வகை மாடல்கள் கார்மின் இந்தியா ஸ்டோர் மற்றும் பிரீமியம் சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் விரைவில் இதை எதிர்பார்க்கலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan