நேற்று (ஜூன் 21) சீனாவில் உள்ள யின்சுவானிலுள்ள சுமார் 8.40 மணியளவில் Fuyang Barbecue உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
பெட்ரோலிய வாயு கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனையில் 7 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவர் உயிருக்கு போராடி வருவதாகவும் Xinhua செய்தி நிறுவனம் கூறியது.
இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் 12 க்கும் அதிகமான தீயணைப்புப்படை வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்ததை காண முடிகிறது.
இச்சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் என்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் சீனா அதிபர் Xi Jinping கூறினார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு 100 க்கும் அதிகமானவர்களுடன் 20 வண்டிகளும் அனுப்பப்பட்டன என்று அவசரகால நிர்வாக அமைச்சகம் கூறியது.
இன்று (ஜூன் 22) காலை சுமார் 4 மணியளவில் மீட்பு பணிகள் நிறைவடைந்தன.