அடுத்த மாதம் சிங்கப்பூரில் சில பெற்றோருக்கு குழந்தை ஆதரவு போனஸ் 3000 வெள்ளி வழங்கப்பட உள்ளது.
எதிர்பார்த்ததை விட ஆறு மாதத்துக்கு முன்னதாகவே வழங்கப்படுகிறது.
அந்தத் தொகையை சுமார் 13,000 பெற்றோர் பெறுவர்.
நேற்று (ஜூன் 21) குமாரி இந்திராணி ராஜா தனது Facebook பக்கத்தில் பற்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் அவர் தேசிய மக்கள்தொகை, திறன் பிரிவுக்கு பொறுப்பு வகிக்கிறார்.
சிங்கப்பூரர்கள் அதிக குழந்தைகளை பெறுவதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் குழந்தை ஆதரவு போனஸ் வழங்கப்பட்டது.
கோவிட்-19 நோய் பரவல் காலகட்டத்தில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிறந்த குழந்தைகளுக்காக குழந்தை ஆதரவு போனஸ் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் முதல்தேதி தொடங்கி கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் நீட்டிக்கப்பட்டது.
கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி வரை வழங்கப்பட்டது.