கால்பந்து காட்சிப்போட்டியில் இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்திய பிரேசில் அணி…!!!

கால்பந்து காட்சிப்போட்டியில் இந்தியா ஆல் ஸ்டார் அணியை வீழ்த்திய பிரேசில் அணி...!!!

தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதற்காக, முன்னாள் இந்திய வீரர்களைக் கொண்ட ஒரு ஆல்-ஸ்டார் இந்திய அணி, 2002 உலகக் கோப்பை வென்ற பிரேசில் அணிக்கு எதிராக ஒரு சிறப்பு கால்பந்து காட்சிப் போட்டியில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தப் போட்டி நேற்று இரவு சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது.

இதில், பிரேசிலிய ஜாம்பவான்கள் ஆல்-ஸ்டார் இந்தியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தனர்.

பிரேசில் அணிக்காக வயோலா மற்றும் ரிக்கார்டோ ஒலிவியரா தலா ஒரு கோல் அடித்தனர்.

அதே நேரத்தில் இந்தியா அணிக்காக பிபியானோ பெர்னாண்டஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

முன்னாள் வீரர்கள் பலர் கலந்து கொண்ட இந்தப் போட்டியைக் காண நேரு மைதானத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.