சிங்கப்பூரில் இந்த ஆண்டு புகை மூட்டம் வழக்கத்தை விட நீண்டகால நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விரைவில் சிங்கப்பூரில் அந்த பருவம் தொடங்க உள்ளது.அதனால் பொதுமக்கள் N95 ரக முகக் கவசங்களை வாங்குவதை ஆர்வம் காட்டுகின்றனர்.
நிறுவனங்கள் முகக் கவசங்களின் இருப்பை சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளன.
வீட்டில் உள்ள காற்றின் தரத்தை மேம்படுத்த மக்கள் முயற்சித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் மட்டும் N95 முக கவசங்களின் விற்பனை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக மருத்துவ பொருட்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவை வெளிப்புற காற்று மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பு வழங்குகின்றது.
அதைத் தொடர்ந்து வீட்டு காற்று சுத்திகரிப்பு இயந்திரங்களின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
2019-ஆம் ஆண்டில் புகை மூட்டம் தொடங்கியபோது வாடிக்கையாளர்களில் 25 சதவீதம் பேர் மொபைல் செயலி மூலம் இது போன்ற சாதனங்களைச் செயல்படுத்தியதாக கூறினர்.
அது நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் மாதம் வரை அது கடுமையாக இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
முகக் கவசங்கள் மற்றும் காற்றை சுத்திகரிக்கும் சாதனங்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.