Singapore Breaking News in Tamil

சிங்கப்பூர் விமானம் தரையிறங்கும் போது நடந்த விபரீதம்!

ஜூன் 19-ஆம் தேதி காலை தைபேயில் (Taipei) தரையிறங்கிய தென்கொரியாவிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்ட Scoot விமானத்தின் இடது சக்கரம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

TR897 விமானம் தைவானின் Taoyuan அனைத்து உலக விமான நிலையத்தில் தரை இறங்கும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தைபேயிலிருந்து பின்னிரவு 1.30 மணிக்கு சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்தது, அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக Scoot விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.அந்த விமானத்தில் 300 க்கும் அதிகமான பயணிகள் பயணித்தாக சொல்லப்படுகிறது.

விமான நிலையத்தில் தரை இறங்கும்போது அதன் இடது சக்கரம் கழன்று விழுந்ததை காண முடிந்தது. அதே சமயம் அதன் வலது சக்கரம் விமானம் நகர்வதற்கு உதவியதாகவும் Taiwan News செய்தி நிறுவனம் கூறியது.

விமான ஓடு பாதையிலோ, இணைப்பு பாதையிலோ கழன்று விழுந்த சக்கரம் கிடந்ததாக தெரியவில்லை.

சிவில் விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று தைவானின் போக்குவரத்து, தொடர்பு, தகவல் அமைச்சர் ஊடகங்களிடம் கூறினார்.

“பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும்´´ என்று Scoot நிறுவனம் கூறியது.

ஜூன் 19-ஆம் தேதி நள்ளிரவுக்கு பிறகு மதியம் 1.35 மணிக்கு மாற்று விமானம் சிங்கப்பூரில் தரை இறங்கியது. அதனைப் பற்றி சாங்கி விமான நிலையம் இணையதளத்தில் குறிப்பிட்டது.