பேங்காங் ஹோட்டலில் இறந்து கிடந்த பெண்..!!! கொலைக்கு காரணமான காதலனை தேடும் பணி தீவிரம்..!!!

பேங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தாய்லாந்து பெண்ணைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் ஆடவரின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 26 அன்று ஹோட்டல் அறையின் குளியலறையில் இறந்து கிடந்த 30 வயதுடைய பிராவ்பிலாட் பலாடோன் என்ற பெண்மணியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
அந்தப் பெண்ணின் காதலன் 25 ஆம் தேதி ஒரு கருப்பு மெர்சிடிஸ் காரில் ஒரு சூட்கேஸுடன் ஹோட்டலை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
விசாரணையில்,இறந்த பெண்ணின் சில விலை உயர்ந்த பொருட்களையும் அவர் எடுத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரும் சிங்கப்பூரில் சந்தித்ததாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்ததாகவும் அந்தப் பெண்ணின் தாய் கூறினார்.
ஆனால் தனது மகள் அந்த நபரை குடும்பத்திற்கு ஒருபோதும் அறிமுகப்படுத்தவில்லை என்று கூறினார்.
இருவருக்கும் இடையே சில வாக்குவாதங்கள் இருந்ததாகவும், ஆனால் அது அவ்வளவு பெரிய விஷயமாக இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், தான் காணாமல் போனால், அதற்கு தனது காதலன் தான் காரணம் என்று தனது மகள் தன்னிடம் கூறியதாக அந்த தாய் கூறினார்.
இந்நிலையில் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த நபரை தேடும் பணியில் தாய்லாந்து காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
அந்தப் பெண்ணின் காதலரான அவர் சியாங் ராய்க்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று தாய்லாந்து போலீசார் நம்புகின்றனர்.
தாய்லாந்து ஊடகங்கள் அவரது பெயர் டேனியல் பெஞ்சமின் கோ வெய்-என் என்று கூறுகின்றன.
பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் அந்தப் பெண்ணின் மரணத்திற்கான காரணம் தெரியவரும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan