ஆன்லைனில் காதலிப்பதாகக் கூறி காதலனை விபரீதத்தில் சிக்க வைத்த பெண்..!!

ஆன்லைனில் காதலிப்பதாகக் கூறி காதலனை விபரீதத்தில் சிக்க வைத்த பெண்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தனது காதலிக்கு சட்டவிரோதமாக பணத்தை மாற்றியதற்காக ஒருவருக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

34 வயதான லிம் ஜியன் சியாங், 2018 ஆம் ஆண்டு ஆன்லைனில் சந்தித்த “லத்திஃபா” என்ற பெண்ணை காதலித்தார்.

துபாயில் இருப்பதாகக் கூறிக்கொண்ட அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று லிம் நம்பினார்.

2020 ஆம் ஆண்டில் லத்தீஃபாவின் சார்பாக பணத்தை மாற்ற அவர் ஒப்புக்கொண்டார்.

போலீஸ் எச்சரிக்கைகளை மீறி அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

அவர் லத்தீஃபாவின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் பெற்று டிஜிட்டல் நாணயங்களை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவற்றை லத்தீஃபாவுக்கு அனுப்பினார்.

லத்தீஃபாவின் சார்பாக லிம் பெற்ற மொத்தத் தொகை சுமார் S$177,000 என நம்பப்படுகிறது.

விசாரணையில் அந்தப்பணம் மோசடி மூலம் பெறப்பட்டது என தெரியவந்துள்ளது.

லத்தீஃபாவை இன்னும் அடையாளம் காணவோ அல்லது அவரைக் கண்டுபிடிக்கவோ முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.