ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் கூட முடி வளரச் செய்யும் இயற்கை வைத்தியம்…!!

ஒரே வாரத்தில் வழுக்கை தலையில் கூட முடி வளரச் செய்யும் இயற்கை வைத்தியம்...!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை அதிகரித்து வருகிறது.இதற்கு மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகள் கூட காரணமாக இருந்தாலும் தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்து இல்லாததும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. தலை முடிக்கு தேவையான போதிய பராமரிப்பை பின்பற்றினாலே முடி உதிர்வதை தவிர்க்கலாம். மேலும் சிலருக்கு பொடுகு மற்றும் அதிக சூடு போன்ற காரணங்களால் முடி உதிர்தல் அதிகரிக்கும்.அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத தீர்வைப் பின்பற்றி உங்கள் முடி உதிர்தல் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டுங்கள்.

தேவையான பொருட்கள்:-

✨️பத்து செம்பருத்தி பூ-10

✨️வெந்தயம்-ஒரு டீஸ்பூன்

✨️நெல்லிக்காய்-நான்கு

✨️கற்றாழை ஜெல்-இரண்டு டீஸ்பூன்

✨️தேன்- அரை டீஸ்பூன்

✨️தயிர்-இரண்டு டீஸ்பூன்

தயாரிப்பு முறை:-

👉 முதலில், செம்பருத்தி பூவின் இதழ்களைப் பிரித்து, தண்ணீரில் சேர்த்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

👉 அடுத்து, ஒரு தேக்கரண்டி ஊறவைத்த வெந்தயம் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.


👉 அடுத்து, நான்கு பெரிய நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து, அரைக்கவும்.

👉 அதன் பிறகு, ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் அரைத்த செம்பருத்தி பூ விழுதைச் சேர்க்கவும்.

👉 பின்னர், வெந்தயம் மற்றும் கற்றாழை கலவையை அதில் சேர்த்து கலக்கவும்.

👉 அடுத்து, நெல்லிக்காய் விழுது, தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பேஸ்ட்டை தலையின் முடி வேர்களில் தடவி,கைகளால் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

👉 பின்னர் ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் தலைமுடியைக் கழுவவும்.

👉 வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்வதால் உங்கள் தலைமுடி நன்றாக வளர உதவும்.


👉 கற்றாழை ஜெல் மற்றும் வைட்டமின் ஈ மாத்திரைகளை நன்கு கலந்து தலையில் தடவினால் முடி வளர்ச்சி மேம்படும்.

👉 வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, வேப்பம்பூவுடன் கலந்து தலையில் தடவி குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

👉 மேலே உள்ள குறிப்புகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி கொட்டிய இடத்தில் புதிய முடி வளர தொடங்கும்.