உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!!

உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!!

நோன்பு பெருநாளை முன்னிட்டு உட்லண்ட்ஸ்,துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக குடிநுழைவு,சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அதன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மார்ச் 28 ஆம் தேதி முதல் 31 வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று கூறியது.இதன் காரணமாக பயணிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும் கூறியது.

எல்லையைக் கடக்க பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது குறித்து அவர்கள் யோசிக்கலாம் என்று அறிவுறுத்தியது.

சமீபத்தில் மார்ச் 14 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை பள்ளி விடுமுறையின் போது 5.6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் உட்லண்ட்ஸ்,துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்தனர்.