வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை…!!!

வெளிப்படாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்டத்தை எளிதாக அணுக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வெளியில் தெரியாத உடற்குறைபாடுகள் உள்ளவர்கள் சட்ட உதவியை எளிதாக அணுகுவதற்காக சட்ட அமைச்சகம் பணிக்குழு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.

Schizophrenia மனநோய்,ADHD எனப்படும் கவனக்கோளாறு, தொடர்பு திறன் குறைபாடு போன்ற பிரச்சனை உள்ளோர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

Pro Bono SG முன்மொழிந்த இந்த திட்டம், ஒவ்வொரு அமைச்சகமும் அமைப்பும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் விதத்தை கண்டறிந்து நெறிப்படுத்தும்.

சட்டம் அனைத்து தரப்பினருக்கும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்ய இது உதவும் என்று இரண்டாம் அமைச்சர் எட்வின் டோங் கூறினார்.

மேலும் சிங்கப்பூரின் சட்ட அமைப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதைக் குறிப்பிட்ட அவர், “சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டிய உறுப்பினர்கள் அதை அணுக முடியாமலும், நீதி கோர முடியாமலும், அமைப்பைப் பயன்படுத்த முடியாமலும் இருந்தால், அது முதல்தர சட்ட அமைப்பாக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என்று கூறினார்.

அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட Pro Bono SGயின் நீதி அணுகல் கருத்தரங்கில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.