Singapore news

`தனக்கு கிடைக்காத சந்தோசங்கள் தன் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் ஜீவன்´ – அப்பா!

ஜூன் 18-ஆம் தேதி (நேற்று) சிங்கப்பூர் விளையாட்டு நடுவத்தில் தந்தையார் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 க்கும் அதிகமான குடும்பங்கள் பங்கேற்றனர்.இந்த ஆண்டு நிகழ்ச்சியில் தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வெவ்வேறு தலைமுறையினரைப் பிரதிப்பலிக்கும் வகையில் செயல்பாடுகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் குதித்து விளையாடுவதற்கு மிகப்பெரிய கோட்டை இடம்பெற்றது.

ஜெங்காவின் மாபெரும் விளையாட்டு….

உங்களை நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும் ரிக்ஷா சவாரிகளும் இருந்தன.

குடும்பங்கள் ஒருவருக்கொருவர் பாராட்டுக் கடிதங்களையும் எழுதும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

பெற்றோர்களும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் ஊக்குவிக்கப்பட்டனர்

தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் Tan Kiat How இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.தந்தையர்களின் மாறிவரும் பங்கை பார்த்து மனம் மகிழ்வதாக கூறினார்.