2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா அணி..!!!

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 23வது FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும், 3 போட்டிகளை நடத்தும் நாடுகளைத் தவிர மற்ற அணிகளுக்கு தகுதிச்சுற்று நடைபெறும்.

இதற்கான தகுதிச் சுற்றுகள் கண்டம் வாரியாக நடத்தப்படுகின்றன.

இதில், தென் அமெரிக்க அணிகளுக்கான தகுதிச் சுற்றில், இந்திய நேரப்படி இன்று நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினாவும், பிரேசிலும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தி,சிறப்பாக விளையாடியது.

போட்டியின் முடிவில் அர்ஜென்டினா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா அணிக்காக ஜூலியன் அல்வராஸ்,என்சொ பெர்னான்டஸ், மாக் ஆலிஸ்டர் மற்றும் சிமோன் ஆகியோர் கோல் அடித்தனர்.

பிரேசில் அணிக்காக மேத்ஸ் கோல் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம், அர்ஜென்டினா 2026 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.