புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு…!!!

புக்கிட் பஞ்சாங் கால்வாயில் சிக்கிய குட்டி நீர் நாய் மீட்பு...!!!

சிங்கப்பூர்:புக்கிட் பாஞ்சாங் கால்வாயில் 12 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிய ஒரு நீர்நாய் குட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பாங் சுவா கால்வாயில் அது சிக்கியது.

இந்த சம்பவம் குறித்து வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ACRES க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் அதை மீட்டனர்.

நீர் நாயை மீட்ட அதிகாரி ஒருவர் அது பலவீனமாக இருப்பதாகக் கூறினார்.

பின்னர் அந்த அமைப்பு நீர் நாய்க்குட்டியின் குடும்பத்தைக் கண்டுபிடித்து,அதை தனது குடும்பத்துடன் சேர்த்தது.

அதிகாரிகள் நீர் நாயை மீட்டு குடும்பத்துடன் சேர்த்ததில் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தனர்.