எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த வெண்தாமரை இதழ் கசாயம்…!!! தயாரிப்பது எப்படி…???

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்த வெண்தாமரை இதழ் கசாயம்...!!! தயாரிப்பது எப்படி...???

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில மருத்துவ குணங்கள் வெண் தாமரை இதழில் உள்ளது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெண்தாமரை இதழ்களின் பொடியை வாங்கி உபயோகித்து பயனடையலாம்.தினமும் வீட்டிலேயே வெண்தாமரை இதழ்களை பயன்படுத்தி தேநீர்,கஷாயம் செய்து பருகிவர எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

வெள்ளை தாமரை இதழ்களின் நன்மைகள்:

👉உடல் சூட்டைக் குறைக்க வெண் தாமரை இதழ்கள் பயன்படுத்தப்படுகின்றன.

👉உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் குணங்கள் வெண்தாமரை இதழ்களில் உள்ளன.

👉மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

👉வெண்தாமரை கஷாயம் குடிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

👉கண் எரிச்சல் மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்த வெண் தாமரை இதழ்களை தேநீர் செய்து குடிக்கலாம்.

👉வெண்தாமரை மூளை சம்பந்தமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

👉கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

👉ஜன்னி பாதிப்பு போன்ற பிரச்சனைகளை வெண்தாமரை கஷாயம் மூலம் சரிசெய்யலாம்.

வெண்தாமரை தேநீர்:

தேவையான பொருட்கள்:

✨️வெண்தாமரை இதழ்

✨️ஏலக்காய்

✨️வெள்ளை சீரகம்

✨️எலுமிச்சை சாறு

✨️இஞ்சி

✨️ சீரகம்

செய்முறை விளக்கம்:

👉 முதலில், ஒரு வெண்தாமரை மலரின் இதழ்களைச் சேகரிக்கவும். பின்னர் இதழ்களை தண்ணீரால் சுத்தம் செய்யவும்.

👉 அடுத்து, ஒரு ஏலக்காயை உரலில் இட்டு நன்றாக நசுக்கவும். பின்னர் ஒரு துண்டு உரிக்கப்பட்ட இஞ்சி மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகத்தை எடுத்துக் கொள்ளவும்.

👉 அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒரு கப் தண்ணீரை ஊற்றவும். தண்ணீர் சூடானதும், அதில் வெண்தாமரை இதழ்களைச் சேர்க்கவும்.

👉 பின்னர் அதில் பொடித்த ஏலக்காய் பொடியை சேர்க்கவும். பின்னர் அதில் தோல் நீக்கிய இஞ்சி மற்றும் ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்க்கவும்.


👉 பின்னர் தேவையான அளவு வெண்தாமரை மலரின் இலைகளைச் சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

👉 பின்னர் இந்த வெண்தாமரை பானத்தை ஒரு கிளாஸில் வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து காலையில் குடிக்கவும்.

👉 இந்த வெண்தாமரை பானத்தை தினமும் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

👉 உயர் இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் போன்ற நிலைமைகளைக் குணப்படுத்த இந்த பானத்தை தினமும் குடிக்கலாம்.

👉 இந்த தேநீர் அல்சர் பாதிப்பை குணப்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.