Singapore Breaking News in Tamil

பறந்து கொண்டிருக்கும் போதே குலுங்கிய விமானம்!

இந்த மாதம் (ஜூன்) 15-ஆம் தேதி சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து British Airways விமானம் புறப்பட்டு லண்டன் விமான நிலையத்திற்கு சென்றடைந்து தரையிறங்க வேண்டியிருந்தது.

மோசமான வானிலை காரணமாக சுமார் 4 மணி நேரத்துக்கு பின் எங்கிருந்த புறப்பட்டதோ அதே இடத்திற்கு திரும்பி வந்தது.

விமானம் மோசமான வானிலை காரணமாக அதிக ஆட்டம் கண்டது.அதனால் 5 ஊழியர்கள் காயம் அடைந்ததாக CNA கூறியது.

British Airways விமானம் ஜூன் 16-ஆம் தேதி சிங்கப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.

ஊழியர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என CNA கூறியது.

இது குறித்து British Airways விமான நிறுவனம்,“ விமான சேவையில் இடையூறு ஏற்பட்டதற்கு வருந்துகிறோம். பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அதோடு அவர்களுக்கு தேவையான உதவிகளை ஏற்பாடு செய்துள்ளோம் ´´ என்று கூறியிருந்தது.

பெரும்பாலான ஊழியர்கள் லண்டனுக்கு சென்றடைந்து விட்டனர். சிங்கப்பூருக்கு ஒரு மருத்துவ குழு மருத்துவ உதவிக்காக வந்தடைந்ததாகவும் கூறியது.

இடையூறுகள் ஏற்படுவது அரிது என்றாலும், பயணிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் சீட் பெல்ட் அணிந்து கொள்வது அவசியம் என்றும் British Airways விமான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.