Latest Singapore News

கட்டிட விபத்தின் எதிரொலி! சிங்கப்பூர் அரசின் அதிரடி நடவடிக்கை!

சிங்கப்பூரில் ஜூன் 15-ஆம் தேதி தஞ்சோங் பகாரில் கட்டிட விபத்து நேர்ந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 20 வயதுடைய ஊழியர் உயிரிழந்தார்.

எப்படி கட்டிடத்தின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது பற்றி விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கட்டட, கட்டுமான ஆணையம் கூறியது.

கட்டிடம் இடிக்கும் பணியில் ஏதேனும் விதிமீறல் நடந்திருந்தால் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது.

எண் 80 ஆன்சன் ரோட்டில் அமைந்துள்ள திட்டம் தொடர்பில் தணிக்கை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்டட, கட்டுமான ஆணையம் கூறியுள்ளது.

தணிக்கை சோதனையின் நோக்கம் கட்டுமான நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதை உறுதி செய்வதாகும்.

கட்டிடத்தை இடிக்கும் பணி பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும்.

இடிக்கும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பான நினைவூட்டல்கள் கட்டுமான நிறுவனங்கள், கட்டிட கலைஞர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அனுப்பப்படும்.

அதோடு வேலை இடத்தில் சோதனை நடவடிக்கைகளும் நடத்தப்படும்.