ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!!

ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை...!!!

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் மின்தடை ஏற்பட்டபோது தொடர்ந்து இயங்கியிருக்கலாம் என்று பொது பயனீட்டு நிறுவனமான National Grid இன் தலைவர் கூறியுள்ளார்.

விமான நிலையத்திற்கு தேவையான
மின்சாரம் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

நார்த் ஹைட் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிலையம் முற்றிலுமாக மூடப்பட்டது.

இதனால் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) மூடப்பட்டிருந்த விமான நிலையம் நேற்று
(மார்ச் 23) இயல்பு நிலைக்குத் திரும்பியது.

ஆனால் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு துணை மின்நிலையங்களில் எந்த இடையூறும் இல்லை என்று National Grid இன் தலைவர் கூறினார்.

விமான நிலையம் செயல்படத் தேவையான மின்சாரத்தை அவர்களால் வழங்க முடியும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் வோல்ட்பை, விமான நிலையம் ஒரு நகரத்திற்கு தேவைப்படும் அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.

விமான நிலையத்தில் பிற சேவைகளை வழங்கத் தேவையான துணை மின்சாரம் இல்லாததை அவர் சுட்டிக்காட்டினார்.

விமான நிலையம் மூடப்பட்டது குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.