சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியீடு!!

கடந்த ஆண்டு வேலையில் இருந்த சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டு கூடுதலாக 8800 பேர் வேலையில் சேர்ந்துள்ளனர்.

நிதி,காப்புறுதி, தகவல்,தொடர்பு போன்ற திறன் சார்ந்த துறைகளில் பலர் வேலைகளில் சேர்ந்ததாக அறிக்கை கூறுகிறது.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வேலையில் இருந்த குடியிருப்பாளர் அல்லாதோர் எண்ணிக்கையும் அதிகரித்தது.

கடந்த ஆண்டு கூடுதலாக 35,700 பேர் வேலையில் சேர்ந்தனர்.அவர்கள் பெரும்பாலும் வேலை அனுமதி முறையில் வேலைக்கு சேர்க்கப்பட்டதாக அறிக்கை கூறியது.

அதற்கு முந்தைய ஆண்டு அத்தகைய வேலைகளில் புதிதாக சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 83500 .

கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

13020 பேர் ஆட்குறைப்புக்கு ஆளாகினர்.

அந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 14590 ஆக இருந்தது.

கடந்த 2024 ஆம் ஆண்டு வேலையில் புதிதாக சேர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44500 அகா உயர்ந்ததாக மனிதவள அமைச்சகம் கூறியது.

அதற்கு முந்தைய ஆண்டான 2023 ஆம் ஆண்டைக் காட்டிலும் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்திருப்பதாக அது சொன்னது.

வேலை நிலவரம் விரைவில் மேம்படும் என்று அமைச்சகம் எதிர்பார்க்கிறது.இருப்பினும் வர்த்தகப் பூசல்,பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும். மேலும் நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுப்பதை குறைக்கக்கூடும் என்று அமைச்சகம் எச்சரித்தது.