அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!!

அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி தாக்க வாய்ப்பு..!!

அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் சூறாவளி,ஆலங்கட்டி மழை மற்றும் காட்டுத்தீ போன்றவை குறித்து எச்சரிக்கையாக உள்ளனர்.

தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் 39 முறை வீசிய சூறாவளியால் பெருமளவு பொருட்சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டது.

இதனால் அங்கு குறைந்தது 36 பேர் உயிரிழந்தனர்.

வெஸ்ட் வெர்ஜீனியா, ஒஹாயோ மற்றும் பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில் மேலும் சூறாவளிகள் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்தப் பகுதிகளில் காற்று மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

புயல் வடக்கே நியூயார்க் மாநிலத்திலிருந்து தெற்கே புளோரிடா வரை அதிக சேதத்தை ஏற்படுத்தியது.

மின் தடையால் 300,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.

சாலையில் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது.

இதற்கிடையில், ஆக்லஹோமாவில் பலத்த காற்று வீசுவதால் அங்கு காட்டுத்தீ பரவியுள்ளது.

காட்டுத்தீயால் கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட கட்டுமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

பலர் தங்கள் வீடுகளை இழந்தும் மின்சாரம் இன்றியும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.