டிக் டாக்கில் வெளிவந்த விளம்பரத்தை கண்டு பணத்தை இழந்த மூதாட்டி…!!!

டிக் டாக்கில் வெளிவந்த விளம்பரத்தை கண்டு பணத்தை இழந்த மூதாட்டி...!!!

மலேசியாவில் 61 வயதான ஓய்வுபெற்ற பெண் ஒருவர் முதலீட்டுத் திட்டத்தை நம்பி சுமார் 2 மில்லியன் ரிங்கிட்டை (சுமார் 599,000 வெள்ளி) இழந்துள்ளார்.

கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் அந்த மூதாட்டி கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்தார்.

டிக்டாக் செயலியில் பார்த்த விளம்பரத்தை நம்பி அவர் அதில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு ரிச்சர்ட் ஓங் என்ற நபர் அந்த மூதாட்டியை வாட்ஸ்அப் குழுவில் சேர்த்தார்.

முதலீட்டு நோக்கங்களுக்காக அந்த மூதாட்டி 15 வங்கிக் கணக்குகளில் 20 முறை பணத்தை டெபாசிட் செய்துள்ளார்.

கணக்கிலிருந்து லாபத்தை எடுக்க கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்ட பின்னரே தான் மோசடி செய்யப்பட்டதை மூதாட்டி உணர்ந்தார்.

பின்னர் அந்த மூதாட்டி இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இந்தத் தகவலை சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் உறுதிப்படுத்தினார்.

சமூக ஊடகங்களில் தோன்றும் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கும் படி காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியது.