சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இந்த சாதனத்தைப் பயன்படுத்த தடையா? எப்போது அமலுக்கு வரும்?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானங்களில் மின்னூட்டம் எனும் Power Bank சாதனங்களைப் பயனப்டுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த தடை Scoot விமானங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய நடைமுறை ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்டது.
இருப்பினும் பவர் பேங்க் சாதனங்களை விமானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது.
அவற்றை பயணிகள் தங்கள் கையோடு எடுத்து செல்லும் பைகளில் வைத்திருக்கலாம் என்று SIA தெரிவித்துள்ளது.
பயணிகள் 100Wh வரை ஆற்றல் கொண்ட சாதனங்களை எடுத்து செல்லலாம்.
அதற்கு மேல் ஆற்றல் கொண்ட சாதனங்களுக்கு சிறப்பு அனுமதி பெறப்பட வேண்டும் என்று SIA கூறியது.
சமீபத்தில் தென் கொரியா, தைவான் மற்றும் தாய்லாந்தில் உள்ள சில விமான நிறுவனங்கள், விமானத்தில் பவர் பேங்க் சாதனங்கள் வெடித்த சம்பவங்களைத் தொடர்ந்து பவர் பேங்க்களைப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளன.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan