Latest Tamil News Online

சிங்கப்பூர் Quarantine நான்கு நாட்கள்….முதல் நாள்!

Work Permit மூலம் சிங்கப்பூர் வருபவர்களுக்கு மட்டும் சிங்கப்பூரில் Quarantine உள்ளது.நீங்கள் Quarantine இல் கிட்டத்தட்ட மூன்றிலிருந்து நான்கு நாட்கள் தங்குவீர்கள்.Quarantine – இல் இருக்க போகிறவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களாக இது அமையும்.

On board centre க்கு நீங்கள் சென்றவுடன் என்ன செய்ய வேண்டும்? அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.

சிங்கப்பூர் வருவதற்கு நிறைய பாஸ்கள் இருக்கிறது. அதில் Work Permit ஒன்று.தற்போது Work Permit எளிதாக கிடைக்கும் பாஸ். நீங்கள் டெஸ்ட் அடிச்சு Work permit மூலமாகவோ, Pcm permit மூலமாகவோ அல்லது Shipyard permit மூலமாகவோ புதிதாக வந்தீர்கள் என்றால் Quarantine உண்டு.

இந்த பெர்மிட்கள் மூலம் சிங்கப்பூரில் இருந்தவர்கள் லீவுக்காக ஊருக்கு போயிட்டு வருபவர்களுக்கு Quarantine கிடையாது.

Onboard centre – இல் புக் பண்ணதற்கு பிறகுதான் நீங்கள் வர வேண்டும். Onboard centre-இல் எந்த தேதி கொடுக்கிறார்களோ? அப்பொழுதுதான் வரவேண்டும்.

நீங்கள் சிங்கப்பூர் வந்தவுடன் காலை 9 மணிக்கு மேல் Onboard centre க்குள் நுழையலாம். காலை 9 மணியிலிருந்து மாலை வரை எந்நேரம் ஆனாலும் செல்லலாம். நீங்கள் சிங்கப்பூர் வந்தவுடன் ஏர்போர்ட்டிலிருந்து Onboard centrecentre செல்ல இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று, கம்பெனியே வாகனம் அனுப்பி Onboard centre இல் விடுவார்கள். மற்றொன்று ஒரு சில கம்பெனிகள் நீங்களாகவே டாக்ஸி மூலம் Onboard centre க்கு செல்லுங்கள் என்று கூறுவார்கள். கம்பெனி அதற்கான பணத்தைக் கொடுப்பார்களா? என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் தரமாட்டார்கள் என்று கூறினால், உங்களுடைய ஏஜென்ட் தருவார்கள். டாக்ஸி பில்லை பெற்றுக் கொள்ளுங்கள்.

கம்பெனி வண்டி மூலமாகவோ அல்லது டாக்ஸி மூலமாகவோ Onboard centre க்கு சென்று விடுங்கள்.

முதலில், சிம் (Sim) வாங்கி விடுங்கள். ஏர்போர்ட்டில் சிம்மின் விலை $50 டாலர் முதல் $55 டாலர் வரை விற்கப்படும்.வெளியில் சிம்மின் விலை குறைவு.

Onboard centre – இல் Wifi connection உண்டு. ஆனால், அங்கே அனைவரும் பயன்படுத்துவதால் வேகமாக கிடைக்காது.அங்கே இரண்டாம் நாள் தான் சிம் வழங்குவார்கள். முடிந்தவரை சிம் வாங்கி கொண்டு செல்வது நல்லது.

நீங்கள் அங்கு சென்றவுடன், முதலில் உங்களுக்கு அட்மிஷன் போட வேண்டும். உள்ளே உங்களை வர அனுமதித்தவுடன் Passport, ip, Onboard centre booking email printout கேட்பார்கள்.

தேவையான பொருட்களை மட்டும் உங்களுடன் எடுத்துக் கொண்டு வருவது நல்லது. ஏனென்றால் முதல் நாளில் நீங்கள் செல்லும் இடங்களுக்கு அதை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்கும். கெட்டுப் போகக்கூடிய பொருட்களை கொண்டு வர வேண்டாம். ஏனென்றால், நீங்கள் அங்கே மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை தங்குவீர்கள்.

நீங்கள் உள்ளே சென்றவுடன் வரிசையாக உட்கார சொல்வார்கள். அங்கே இருக்கும் அதிகாரி உங்களை எங்கே உட்கார சொல்கிறாரோ அங்கே உட்காருங்கள். அட்மிஷன் போடும்போது அவர்கள் கேட்கும் எல்லாவற்றுக்கும் பதில் கூறுங்கள்.சொல்லும் போது கொஞ்சம் சத்தமாக சொல்லுங்கள். ஏனென்றால்,நீங்கள் மெதுவாக கூறினால் அவர்கள் அதை தப்பாக புரிந்து கொள்வதற்கும் வாய்ப்புள்ளது.Onboard centre இல் மெடிக்கல் செக்கப் செய்வார்கள். ஒரு உதாரணமாக உங்களுக்கு கண் பரிசோதனை(eye test) எடுக்கும் பொழுது நீங்கள் மெதுவாக கூறினால், உங்களுக்கு சரியாக கண்கள் தெரியவில்லை என்று தவறாக புரிந்து கொள்ள கூட வாய்ப்புள்ளது. முடிந்தவரை அவர்களுக்கு கேட்கும்படி பேசுங்கள். அங்கே ஒரு நாளைக்கு அதிகமானோர் Quarantine இல் தங்க வருவார்கள். அதனால் அங்கே வேலை செய்பவர்கள், டாக்டர் அனைவரும் வேகமாக செயல்படுவார்கள். அவர்களுக்கு ஏற்றார் போல் நீங்களும் வேகமாக செயல்படுங்கள்.

அட்மிஷன் போட்ட பின் Sticker கொடுப்பார்கள். அதில் Block no,Floor no, Room no இருக்கும்.

அதன் பிறகு உங்களுடைய பொருட்களை சோதனை செய்வார்கள். உங்களுடைய ஹேண்ட் லக்கேஜ் முதல் அனைத்தையும் open செய்து பார்ப்பார்கள். அதில் பாக்கு, குட்கா, சிகரெட்,கெட்டு போக கூடிய பொருட்கள் அளவுக்கு அதிகமாக இருந்தால்,அதனை எடுத்துக் கொள்வார்கள். இதுபோன்ற பொருட்கள் இருக்கிறதா என்பதை செக் பண்ணுவார்கள்.

ரூமுக்கு செல்லும் போது உங்களுக்கு தேவையான பொருட்கள் இருக்கிற பேக் ஒன்று கொடுப்பார்கள். அதோடு ஒரு சின்ன டப்பா கொடுப்பார்கள். அந்த டப்பா கொடுக்கவில்லை என்றால் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.இரண்டாவது நாளில் உங்களுக்கு மெடிக்கல் டெஸ்ட் நடக்கும். சிறுநீரகப் பரிசோதனைக்காக அந்த டப்பா தேவைப்படும்.

முதல் நாள் முழுவதும் அட்மிஷன் தான் நடக்கும். ஒரு ரூமில் ஐந்து பெட்கள்(Bed) இருக்கும். Quarantine புக் பண்ணும் போது நீங்கள் Veg அல்லது Non-veg சாப்பிடுவீர்களா என்று கேட்டிருப்பார்கள். அட்மிஷன் போடும்போதும் கேட்பார்கள். ரூமில் உங்களுடைய பொருட்களை உங்களுக்கான லாக்கரில் வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டாம் நாள் Quarantine பற்றிய தகவலை அடுத்து வர உள்ள பகுதியில் காண்போம்……