வெயிலால் முகம் கருத்திருச்சுன்னு கவலையா..?? இதோ உங்களுக்கான இரவு நேர ஃபேஸ் பேக்..!!!

வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. நாம் சிறிது நேரம் வெளியே சென்று விட்டு வந்தால் கூட அடையாளமே தெரியாத அளவிற்கு தோளின் நிறம் மாறி இருக்கிறது.இதுபோன்ற சூழ்நிலையில், சருமத்திற்கு போதுமான பராமரிப்பு வழங்குவது அவசியம்.
இதற்கு, சருமம் ஃபேஸ் பேக்குகள், ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் ஸ்க்ரப்கள் போன்ற சரும பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.
இந்த சிகிச்சைகளைப் பெற நீங்கள் அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அர்த்தமல்ல, வீட்டிலேயே ஒரு சில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த பலன்களைப் பெறலாம்.
உண்மையில், நீங்கள் இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தும்போது, உங்கள் சரும செல்கள் ஆரோக்கியமாகவும் விரைவாகவும் புத்துயிர் பெறும்.இயற்கை ஃபேஸ் பேக்குகள் உங்கள் நிறத்தை மீட்டெடுக்கவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
கரும்புள்ளிகளை நீக்கி, நிறத்தை மேம்படுத்த உதவும் சில நைட் ஃபேஸ் பேக்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஃபேஸ் பேக்குகளை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால், கோடையிலும் கூட உங்கள் முகம் பொலிவாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.
மஞ்சள் மற்றும் பால் ஃபேஸ் பேக்
உங்கள் முகத்தில் சுருக்கங்கள், கருவளையங்கள் போன்றவை தென்பட ஆரம்பித்தால், இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.
செய்முறை:
👉 இந்த ஃபேஸ் பேக் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 4 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும்.
👉 பின்பு அத்துடன் 6 டீஸ்பூன் காய்ச்சாத பாலுடன் கலந்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.
👉 அதை உங்கள் முகத்தில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும்.
👉 இந்த ஃபேஸ் பேக் சருமத்தை ஈரப்பதம் ஆக்குவதோடு வெயிலால் கருமையாகிவிட்ட சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது.
தக்காளி மற்றும் பால் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் முகப்பரு உள்ளவர்களுக்கு சிறந்தது. இந்த ஃபேஸ் பேக் சூரிய ஒளியால் சேதமடைந்த சருமத்தை சரிசெய்யவும், சரும செல்களை குளிர்விக்கவும் உதவுகிறது.
செய்முறை:
👉 இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்வதற்கு 1 தக்காளியை நன்றாக கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
👉 பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
👉 அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் எடுத்து, பின்னர் அதனுடன் 2 தேக்கரண்டி காய்ச்சாத பால் சேர்த்து கலக்கவும்.
👉 இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு, மறுநாள் காலையில் கழுவினால் சிறந்த பலன் கிடைக்கும்.
ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
வீட்டில் இருக்கும் ஓட்ஸ் உடன் சிறிது இயற்கையான தேனைச் சேர்த்து ஒரு ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.இந்த ஃபேஸ் பேக் இறந்த சரும செல்களை முற்றிலுமாக நீக்கி, சரும வறட்சியைப் போக்கும்.
செய்முறை:
👉 ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
👉 பின்னர் இந்த பவுடருடன் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலக்கவும்.
👉 இந்தக் கலவையை முகத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, மறுநாள் காலையில் கழுவவும்.
👉 இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால், உங்கள் முகம் பொலிவாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan