கென்னத் ஜெயரத்தினத்திற்கு ஒன்பதாவது POFMA உத்தரவு பிறப்பிப்பு..!!

கென்னத் ஜெயரத்தினத்திற்கு ஒன்பதாவது POFMA உத்தரவு பிறப்பிப்பு..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரும் இரண்டாம் நிதியமைச்சருமான திரு. சீ ஹாங் டாட்,திரு. கென்னத் ஜெயரத்னத்தின் முகநூல் பதிவிற்கு POFMA தவறான தகவல் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு திருத்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

திரு. ஜெயரத்னம் இந்த மாதம் மார்ச் 3 ஆம் தேதி (மார்ச் 2025) இந்தப் பதிவை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இது திரு. ஜெயரத்னத்தின் வலைத்தளமான தி ரைஸ்பவுல் சிங்கப்பூருக்கு விதிக்கப்பட்ட ஒன்பதாவது திருத்த உத்தரவு ஆகும்.

குடியேற்றக் கொள்கைகள் மூலம் அரசாங்கம் நில விற்பனையைக் கட்டுப்படுத்தி நில விலைகளை உயர்த்தி வருவதாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் அரசாங்கம் இந்த தகவல் தவறானது என்றும் துல்லியமான தகவலுக்கு அரசாங்க வலைத்தளங்களை நாடுமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியது.

அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கைகள், சிங்கப்பூர் மக்கள்தொகையில் வயதானோர் மற்றும் குறைந்த பிறப்பு விகிதங்களின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கம் கொண்டவை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிலத்தின் நியாயமான சந்தை மதிப்பு, நிறுவப்பட்ட மதிப்பீட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் தலைமை மதிப்பீட்டாளரால் தீர்மானிக்கப்படுகிறது என்று அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.