ஆள்மாறாட்ட மோசடி சம்பவங்களால் சுமார் 1.7 மில்லியன் வெள்ளி இழப்பு…!!

ஆள்மாறாட்ட மோசடி சம்பவங்களால் சுமார் 1.7 மில்லியன் வெள்ளி இழப்பு...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து மேற்கொள்ளப்பட்ட மோசடிகளில் 1.7 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து காவல்துறையிடம் அத்தகைய 6 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மோசடி செய்பவர்கள் வெவ்வேறு அரசாங்க அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றியுள்ளனர்.

சிங்கப்பூர் நாணய வாரியம், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், வருமான காப்பீடு மற்றும் யூனியன் பே ஆகியவற்றின் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மோசடி செய்பவர்கள் +65 அல்லது 8 போன்ற எண்களிலிருந்து அழைக்கலாம்.

காப்பீட்டு பிரீமியம் செலுத்தப்படவில்லை அல்லது காப்பீட்டுத் திட்டம் காலாவதியாகப் போகிறது என்று கூறி அவர்கள் மோசடியில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நாணய வாரியம் அறிவுறுத்தியுள்ளது.