ஊட்ரம் ரோட்டில் தனியார் பேருந்தும் ,லாரியும் மோதி விபத்து!! பேருந்து ஓட்டுநர் மரணம்!!

ஊட்ரம் ரோட்டில் மார்ச் 12 ஆம் தேதி தனியார் பேருந்தும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 62 வயதுடைய பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து 12 ஆம் தேதி காலை சுமார் 11.20 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் காவல்துறை 8World செய்தித்தளத்திடம் கூறியது .
இந்த விபத்து Cantonment road) நோக்கிச்செல்லும் வழியில் நேர்ந்தது.
இந்த விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் 47 வயதுடைய பயணி ஆகிய இருவரையும் செங் காங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது.
பேருந்து ஓட்டுநர் உயிரிழந்து விட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Follow us on : click here