Latest Singapore News in Tamil

சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளில் சிற்றுண்டிக் கடைகள் நடத்த ஆட்கள் தேவை – சிங்கப்பூர் கல்வி அமைச்சகம்!

சிங்கப்பூரில் உள்ள செயல்பட்டு வந்த சிற்றுண்டி கடைகள் கிருமி பரவல் காலக்கட்டத்துக்கு பிறகு மூடப்பட்டுள்ளது.

அதற்கு செலவுகள் அதிகரித்தும் வருமானம் குறைவாக கிடைப்பது காரணமாக கூறப்படுகிறது.

சில பள்ளிகள் தகுந்த விற்பனையாளர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிரமப்படுகின்றன.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு முக்கியம் எனவே, பெற்றோரும் அதில் கவனம் செலுத்துகின்றனர்.

கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில் சிற்றுண்டி கடை நடத்துவதற்கு பொருத்தமான நபர் தேவை என்ற சுமார் 60 விளம்பரங்கள் உள்ளன.

மாணவர்களின் தேவைக்கேற்ப பெரும்பாலான பள்ளிகளில் கடைகள் இருப்பதாக கல்வி அமைச்சகம் கூறியது.

கடைக்காரர்களைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிரமத்தையும் அது ஒப்புக்கொண்டது.

நிலைமையைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அமைச்சகம் கூறியது.