உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…??

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா...??

இந்தோனேசிய தீவுகளுக்கு அருகில் கடலுக்கு நடுவில் அமைந்துள்ள மர்மக்கோடு பற்றி உங்களுக்கு தெரியுமா..?? ஆம் கண்ணுக்கு தெரியாத இந்த சுவர் போன்ற அமைப்பு ஒரு தடுப்பு பகுதி போன்று செயலாற்றுகின்றது. இதற்கு Wallace Line என்று பெயர். இந்த Wallace Line இக்கு இடது புறமும் வலது புறமும் வாழும் உயிரினங்கள் இந்த கோட்டை கடப்பதில்லையாம்.மேலும் இந்த சுவரின் குறுகலான பாதையின் அகலம் 30 முதல் 35 கிலோமீட்டர் கொண்டதாக இருக்கிறது.

இந்த Wallace Line ஐ உயிரினங்கள் கடக்காதது ஏன்..??

19ஆம் நூற்றாண்டை சேர்ந்த Alfred Russel Wallace என்ற உயிரியல் ஆய்வாளர் உலகெங்கிலும் பயணம் செய்து அங்குள்ள உயிரினங்கள், தாவரங்கள்,விலங்குகள் போன்றவற்றை சேகரித்து அதில் ஆராய்ச்சியை தொடங்குவார். அப்படி அவரின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த Wallace Line. பூமியை பற்றிய அவரின் கூற்றானது,இதற்கு முன்னர் நடந்த அனைத்து சம்பவங்களின் விளைவாகவும் அதன் கடைசி நிலையாகவும் தான் இன்றைய பூமி இருப்பதாக கூறினார்.

உலகெங்கிலும் ஆராய்ச்சியை மேற்கொண்ட இவர் இந்தோனேசியாவிலும் தனது ஆய்வுகளை தொடங்குகிறார். இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட 17508 தீவுகள் உள்ளது.இந்தோனேசியாவின் குறுக்கே தான் அந்த மர்மக்கோடு உள்ளது. இந்த தடுப்பு போன்ற பகுதிக்கு மேற்கே உள்ள இந்தோனேசியா பகுதிகளில் ஆசிய உயிரினங்களான யானை, காண்டாமிருகம் போன்ற விலங்குகள் உள்ளது. அதுவே இந்த சுவருக்கு கிழக்கே அமைந்துள்ள பகுதிகளில் ஆஸ்திரேலியா பகுதிகளில் காணப்படும் கங்காரு போன்ற உயிரினங்கள் பெரும்பாலும் அமைந்துள்ளது. இந்த தனித்துவமான அமைப்பை வைத்து இதற்கு நடுவில் ஒரு தடுப்புச் சுவர் உள்ளதாக கூறினார். இவருக்கு பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களும் அதை ஆராய்ந்து பார்த்ததில் உண்மை வெளிப்படவே இதற்கு Wallace Line என்று பெயர் வந்தது.

இந்த கோட்டை ஏன் எந்த உயிரினங்களும் கடப்பதில்லை…???

பூமி கிட்டத்தட்ட 24,000 கோடி ஆண்டுகளுக்கு முன்பு pangea என்ற ஒரு பெரிய நிலப்பரப்பாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 20 கோடி ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட கண்ட நகர்வினால் அது தற்போது உள்ள கண்டங்களாக மாறி இருக்கின்றது. இந்த கண்ட நகர்வுகளுக்கு உதாரணமாக Mesosaurus என்ற உயிரினம் 26 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.இது நன்னீரில் மட்டுமே வாழக்கூடிய தன்மை கொண்டது. இந்த உயிரினம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொல்பொருள் எச்சங்கள் தென் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளில் கண்டெடுக்கப்பட்டது.இதன் அடிப்படையில் பூமி பெரிய நிலப்பரப்பாக இருந்ததை அறிய முடிகிறது. ஏனெனில் அட்லாண்டிக் கடல் நீரானது உப்பு தன்மை கொண்டது. இங்கு எப்படி அந்த உயிரினம் வாழ்ந்திருக்க முடியும் என்ற கூற்றின் அடிப்படையில் கணிக்க முடிகிறது. இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் கண்ட நகர்வு நடந்திருப்பது உறுதியாகிறது.

பூமி ஒரு பெரிய நிலப்பரப்பாக இருந்த போது எல்லா உயிரினங்களும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்ததாகவும் அதன் பின்னர் நிகழ்ந்த கண்ட நகர்வால் உயிரினங்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த கண்ட நகர்வுகள் தற்பொழுதும் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றது. இந்த கண்ட நகர்வால் தான் அண்டார்டிகாவில் இருந்து ஆஸ்திரேலியா பிரிந்து வந்ததாகவும் கூடவே ஆசிய நிலப்பகுதிகள் சில ஒன்று சேர்ந்ததாகவும் அதனால்தான் இந்தோனேஷிய தீவுகள் உருவானதாக கூறப்படுகிறது.

இந்த நிலப் பகுதிகள் குளிர்காலத்தின் போது ஐஸ் கட்டியாக மாறியபோது உயிரினங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணித்ததற்கான ஆதாரம் உண்டு. ஆனால் ஐஸ் கட்டி உருகிய பிறகு நீர்மட்டம் உயர்ந்ததால் அதனால் பயணிக்க முடியவில்லை. இருப்பினும் நீந்த கூடிய உயிரினங்களால் இந்தக்கோட்டை கடக்க முடியும் அல்லவா ..ஏன் கடக்கவில்லை..?? அங்கு தான் கடலில் நிகழக்கூடிய Ocean current எனும் நிலையை பற்றி அறிய முடிகிறது.

Wallace Line செல்லக்கூடிய இந்த பகுதியில் கடலின் மேற்பரப்பில் இருந்து 30 மீட்டர் ஆழத்தில் நீரோட்டமானது மணிக்கு 15 அல்லது 16 கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்கின்றது.

மேலும் குறுகலான பாதை அதாவது பாலிக்கும் லாம்போக்கும் இடைப்பட்ட பகுதியில் lombok strait எனும் அமைப்பு அமைந்துள்ளது.இரண்டு பெரும் நிலப்பரப்பிற்கு இடையில் செல்லும் பாதையைத்தான் இப்படி கூறுகிறார்கள்.அதன் அடிப்படையில் இந்திய பெருங்கடலும் பசிபிக் பெருங்கடலும் இணையும் இடத்தில் தான் இந்த lombok strait இருக்கிறது. பெரிய நீர்நிலைகள் இணையக்கூடிய இடத்தில் குறுகலான பாதையாக இருப்பதால் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது இங்கு நீரோட்டம் அதிகமான வேகத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டது.

மேலும் அப்பகுதிகளுக்கு அருகிலேயே Makkaskar strait இருப்பதால் இப்பகுதியிலும் அதிகமாக நீரோட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.wallace line செல்லக்கூடிய பகுதியில் இந்த குறுகலான பாதைகள் அமைந்துள்ளதால் அங்கு கடல் ஆழம் அதிகமாக இருப்பதாகவும்,நீரோட்டம் அதிகமாக இருப்பதாலும் இங்கு இயற்கையாகவே ஒரு தடுப்பு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால்தான் இந்தோனேசிய தீவுகளில் தனித்துவமான சில விலங்குகளை காண முடிகிறது. இந்தோனேசியாவின் தேசிய விலங்கான கொமுடோ டிராகன் இயற்கையான சூழ்நிலைகளில் மட்டுமே வாழக்கூடியது.இது தீவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காண முடியும். இது தவிர இங்கு சுமத்திரன்,புலி சுமத்திரன் ரங்குட்டான், ஜாவாங் காண்டாமிருகம் போன்றவற்றை காணலாம்.

தொலைதூர பறவைகள் மற்றும் பூச்சிகள் போன்றவை இரு பகுதிகளிலும் பொதுவாக வாழ்கின்றன. உயிரினங்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிகளுக்கு கடக்க முடியாத சூழ்நிலையில் தற்போது செயற்கையாக மனித தலையீட்டினால் மேற்கு பகுதியில் இருக்கும் லாங் டெய்ல் மெக்கா வகை குரங்கினங்கள் கிழக்கு பகுதியில் இருக்கும் பகுதிகளில் விடப்பட்டதால் தற்போது இந்த வகைக் குரங்கினங்கள் 2 பகுதிகளிலும் பார்க்க முடிகிறது. எது எப்படி இருந்தாலும் Alfred russel wallace கூற்றுகள் பல நூறு ஆண்டுகள் கடந்தாலும் அது பொருத்தமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.