இந்தியாவில் Starlink இணையச்சேவை!!

இந்தியாவில் Starlink இணையச்சேவை!!

எலான் மஸ்க்கின் (Elon Musk) SpaceX நிறுவனத்துடன் இந்தியாவின் Bharti Airtel தொலைத்தொடர்பு நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அந்த ஒப்பந்தம் இந்தியாவில் Starlink துணைக்கோள் இணையத்தை அறிமுகம் செய்வதற்கு வழி வகுக்கும்.

அந்த சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்வது SpaceX இன் நீண்டநாள் கனவு.

ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கு செயற்கைகோள் சேவைகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து பில்லியனர் முகேஷ் அம்பானியின் நிறுவனத்துடன் SpaceX மோதி வருகிறது.

ஆனால் இந்திய அரசாங்கம் மஸ்க்கின் நிறுவனத்தை ஆதரிக்கிறது.

SpaceX , Airtel ஆகியவை இணைந்தது வாடிக்கையாளர்களுக்கு Starlink சேவைகள் மற்றும் பொருட்களை வழங்கும் .

அந்த சேவைகள் பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களுக்கு வழங்கப்படும்.