ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!!

ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!!

ஐபிஎல் சீசன் 2025 தொடங்க இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் ஜடேஜா சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரை முடித்த கையோடு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வென்றது. இந்த போட்டியில்,பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் இந்திய அணி வீரர் ஜடேஜா இருப்பது ரோஹித் அணிக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது.

இருப்பினும், ஜடேஜாவுக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அவர் சிறப்பாக பந்து வீசி சில விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதைத் தவிர, பீல்டிங்கிலும் ஜடேஜா மிக முக்கிய பங்கு வகித்தார்.

இதன் காரணமாக இந்திய அணிக்காக சிறந்த ஃபீல்டிங் விருதை ஜடேஜா பெற்றார்.இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பிறகு வெற்றியைக் கொண்டாடிய இந்திய வீரர்கள், தற்போது துபாயில் இருந்து நேரடியாக தாயகம் திரும்பியுள்ளனர்.

ஜடேஜா நேராக குஜராத் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சென்னையில் தரையிறங்கினார். வருண் சக்கரவர்த்தியும் ஜடேஜாவும் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.இதன் பின்னர், ஜடேஜா நேராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கியுள்ள ஹோட்டலுக்குச் சென்றார்.அங்கு, ஜடேஜா தோனியைச் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளார்.

இதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறது. ஜடேஜா இந்த பயிற்சி முகாமில் ஓய்வு இல்லாமல் இணைய உள்ளார். இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஒரு வார விடுமுறைக்குப் பிறகு ஜடேஜா ஐபிஎல் சீசனுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தோனியை வெற்றியுடன் அனுப்ப வேண்டும் என்ற உந்துதலால் ஜடேஜா, அனைத்து ஓய்வுகளையும் தள்ளி வைத்துவிட்டு நேராக சிஎஸ்கே அணிக்காக பயிற்சி முகாமுக்கு வந்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணி வீரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.