மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!!

மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்...!!!

மலேசியாவில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் தனது காரை வெளியே எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்டார்.

காலையில் அங்கு மிகக் குறைவான வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

அன்று இரவு தனது காரை திரும்பி வந்தபோது அங்கு ​​வேறு எந்த வாகனங்களும் இல்லை என்றும், அந்த இடம் ஒரு வெளிப்புற உணவகமாக மாற்றப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

அவரது காரைச் சுற்றி எல்லா திசைகளிலும் மேசைகள் மற்றும் நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

வாடிக்கையாளர்கள் அங்கே அமர்ந்திருந்ததால் காரை வெளியே எடுக்க எடுக்க முடியாமல் தான் சிரமப்பட்டதாக கூறினார்.

இது தொடர்பான வீடியோவை அவர் டிக்டோக்கில் பதிவிட்டதன் மூலம் இந்த வீடியோ வைரலானது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் இது மலேசியாவில் நடக்கும் ஒரு பொதுவான நிகழ்வு என்று கூறினர்.

மலேசியாவில் சில இடங்கள் பகலில் வாகன நிறுத்துமிடங்களாகவும், இரவில் சந்தைகளாகவோ அல்லது உணவகங்களாகவோ மாறிவிடுவதாகக் கூறினர்.