ஆய்வுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!! குழந்தைகளை தாக்கும் கொழுப்பு கல்லீரல் நோய்..!!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கொழுப்பு கல்லீரல் நோய் என்பது வயதானவர்களின் நோயாக இருந்தது. ஆனால் தற்போது இளம் பருவத்தினரிடையே கொழுப்பு கல்லீரல் நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக சமீப காலங்களில் குழந்தைகளின் கல்லீரலில் கொழுப்புச் சேர்தல் அதிகரித்து வருகிறது. குழந்தைகளில் ஏற்படும் இந்த நிலையை நாம் ஆல்கஹாலிக் இல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கிறோம்.கடந்த சில ஆண்டுகளில் பல குழந்தைகள் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொழுப்பு கல்லீரல் நோய் காண காரணங்கள்:
👉 மோசமான உணவுப் பழக்கம்
👉 உடல் பருமன்
👉 நீரிழிவு நோய்
👉 ஹெபடைடிஸ் வைரஸ் தொற்று
👉 இன்சுலின் குறைபாடு
கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகள்:
🔻 சோர்வு
🔻 வயிற்று வலி
🔻 மூச்சுத் திணறல்
🔻 சிறுநீரின் நிறம் மாறுதல்
🔻 குமட்டல்
🔻 வாந்தி
🔻 தோல் ஒவ்வாமை
🔻 அரிப்பு
🔻 கணுக்கால் வீக்கம்
🔻 கால் வீக்கம்
🔻 பலவீனம்
கொழுப்பு கல்லீரலைக் கண்டறியும் சோதனைகள்:
மேற்கண்ட அறிகுறிகள் குழந்தைகளில் காணப்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது முக்கியம்.ALT மற்றும் இமேஜிங் சோதனைகள் மூலம் கொழுப்பு கல்லீரல் நோயைக் கண்டறியலாம். சோதனையில் கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பது தெரிய வந்தால் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றால் நோயை குணப்படுத்தலாம்.
கொழுப்பு கல்லீரல் நோய் வராமல் தடுப்பது எப்படி..??
குழந்தைகளுக்கு துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை பெற்றோர் கொடுக்கலாம். இயற்கையான உணவுகளிலேயே எண்ணற்ற பலன்கள் அடங்கியுள்ளன.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்கவும். குழந்தைகள் ஒவ்வொரு நாளும் எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் மது அருந்துவதையும் புகைபிடிப்பதையும் நிறுத்த வேண்டும். கொழுப்பு கல்லீரல் நோயை உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் குணப்படுத்த முடியும்.
Follow us on : click here