இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!!

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்ற ஜெசிகா பெகுலா..!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா,சீனாவின் வான் சின்யு உடன் மோதினார்.

இதில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய ஜெசிகா பெகுலா 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

இதன் பிறகு அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 4வது சுற்றில் ஸ்விடோலினாவை எதிர்கொள்வார்.

மற்றொரு போட்டியில் செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவும், சகநாட்டு வீராங்கனை கேடரினா சினியாகோவாவும் மோதினர்.

கரோலினா முச்சோவா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவும் ,கரோலினா முச்சோவாவும் நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.