சிங்கப்பூர் ஆயுதப்படையைச் சேர்ந்தவர், சாங்கி கடற்படை தளத்தில் இறந்து கிடந்தது தற்பொழுது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆயுதப் படையைச் சேர்ந்த வீரர்கள் எப்பொழுதும் போல தங்களது தொடர் பயிற்சியில் ஈடுபட்ட பொழுது காலை சுமார் 8.50 மணி அளவில் வீரரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடலை கண்டறிந்த உடன் வீரர்கள் உடனே மேலதிகாரிக்கு தகவல் கொடுத்ததும் உடனே அதிகாரி அங்கு விரைந்தார்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக சிங்கப்பூரின் குடிமை தற்காப்பு படை மற்றும் காவல்துறை ஆகியவற்றிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதிகப்படியான பயிற்சியின் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் வீரரின் மரணத்திற்கும், பயிற்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என தற்காப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மரணத்தில் எவ்விதமான சந்தேகமும் இல்லை என காவல்துறை முதலில் தெரிவித்தது. அதன் பிறகு விசாரணை தற்போது வேறு கோணத்தில் மாற்றப்பட்டுள்ளது.
வீரரின் மரணம் இயற்கைக்கு மாறாக இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மரணமடைந்த வீரரின் குடும்பத்திற்கு சிங்கப்பூர் ஆயுதப்படை மற்றும் அரசாங்கம் ஆனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது.
மேலும் அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், அவர்களின் குடும்பத்திற்கு தேவையான வாழ்வாதாரத்தையும் அரசு தருவதாக ஆறுதல் அளித்துள்ளது.