ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!!

ஸ்கூட் விமான நிறுவனம் அதன் சேவைகளை விரிவுபடுத்த திட்டம்..!!

சிங்கப்பூர்: மலிவு விலையில் சேவைகளை வழங்கும் விமான நிறுவனமான ஸ்கூட் இந்த ஆண்டு தனது சேவைகளை கணிசமாக விரிவுபடுத்துகிறது.

இதன் சேவை குறைந்தது 6 புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கூட் நிறுவனம் சுமார் 15 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

இவற்றில் ஏர்பஸ் A320கள் மற்றும் எம்ப்ரேயர் E190-E2 ரக விமானங்கள் ஆகியவை அடங்கும்.

எனவே ஸ்கூட் நிறுவனம் தனது சேவைகளை விரிவுபடுத்த விரும்புகிறது.

அவற்றின் புதிய திட்டங்களில் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்கும்,சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸின் இலோய்லோ நகருக்கும் இடையேயான சேவைகள் உள்ளிட்டவை அடங்கும்.

மற்ற இடங்களின் சேவைகள் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்தது.

கோவிட்-க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டில் அதன் செயல்பாடுகளில் 5% அதிகரித்திருப்பதாக ஸ்கூட் நிறுவனம் தெரிவித்தது.

இனி வரும் காலங்களில் அதன் வளர்ச்சி தீவிரமாக இருக்கும் என்று ஸ்கூட் நிறுவனம் தெரிவித்தது.