சிங்கப்பூர் அதிபருக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கும் இடையில் தேர்தல் எதிர்பார்ப்புகள் தற்பொழுது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
தேர்தலில் களம்பிறங்க போகும் வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் சற்று முன்பு சிங்கப்பூரை சேர்ந்த Harvey Norman Ossia என்ற நிறுவனத்தின் தலைவர் ஜார்ஜ் கோ அதிபர் போட்டியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
தற்பொழுது 63 வயதை நிறைவு செய்திருக்கும் இவர் தனது 16 வது வயதில் இருந்து சுய தொழிலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் எந்த அரசியல் கட்சியிலும் இவர் இருந்ததில்லை என்பது மேலும் சிறப்பான விஷயம் இவர் யாருடனும் கூட்டணி சேராமல் சுயேட்சையாக களமிறங்க போவதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹார்வே நார்மன் என்ற நிறுவனத்தை முதலில் சிங்கப்பூருக்கு அறிமுகப்படுத்தியவர் தற்பொழுது தமது வர்த்தகத்தை 14 நாடுகளுக்கு விரைவு செய்துள்ளார். இவர் மற்றொரு நிறுவனமான ஓசியா இன்டர்நேஷனல் என்ற முதலீட்டு நிறுவனத்தின் தலைவராகவும் மற்றும் பார்டர் மிஷன் என்ற நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் தற்போது இருந்து வருகின்றார்.
திருமண வாழ்வையும், பிசினஸ் வாழ்க்கையையும் வெற்றிகரமாக நிகழ்த்தி வரும் இவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் இருக்கின்றனர். அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்கள் ஜூன் 13 முதல் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஒவ்வொருவராக தேர்தலில் விருப்பத்தை தெரிவித்து வருவது சிங்கப்பூரின் தேர்தல் களத்தில் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று ஜார்ஜ் கோ தனது விருப்பத்தினை தெரிவித்து இருக்கின்றார். இதற்கான போட்டி மேலும் வலுவடையலாம் என்று மக்கள் மேலும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே நான் அதிபராக பொறுப்பேற்றால் என்னென்ன கடமைகளை நிறைவேற்றுவேன் என்று சண்முக ரத்தினம் செய்தியாளரிடம் உரக்க கூடியிருந்தார். அரசாங்கத்தின் அணியில் இருப்பதைவிட நடுவராகவே இருக்க விரும்புகின்றேன் என்று தனது வாக்குறுதிகள் மூலம் மக்களிடம் வரவேற்பை பெற்றிருந்தார்.
இந்நிலையில் இன்று விருப்பத்தினை தெரிவித்து இருக்கும் ஜார்ஜ் கோ பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வருகின்றது.