நேற்று(ஜூன் 11) நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊழியர் நிலையமும்,சிங்கப்பூர் வர்த்தக சபை அறைக்கட்டளை ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
மலிவு விலையில் பல் மருத்துவ சேவை வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிடைக்க விருக்கின்றன.
அதன்மூலம் ஆண்டு தோறும் 4000 ஊழியர்கள் பலன் அடைவார்கள்.
இந்த திட்டத்திற்கு ஆறு ஆண்டுகளில் 3 மில்லியன் வெள்ளி நிதி கிடைக்கும்.
மனநலம், பயிற்சி வழி சிகிச்சை போன்றவற்றை உள்ளடக்கி திட்டத்தை விரிவுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
ஊழியர்கள் பல் மருத்துவ சேவைக்கு 30 வெள்ளி பணம் செலுத்தினால் போதும்.
சுமார் 18,000 க்கும் அதிகமான ஊழியர்கள் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு பரிசு பைகளும் வழங்கப்பட்டது.
தள்ளுபடி விலையில் டெலிகாம் சேவைகளுக்கு பதிவு செய்வதோடு, விளையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஊழியர்களுக்கு சில அன்றாடத் தேவைகளை தள்ளுபடி விலையில் பெறுவதற்கு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.