Latest Singapore News

ஆஸ்திரேலியாவில் திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய போது விபத்து! 10 பேர் மரணம்!

ஆஸ்திரேலியாவில் New South Wales மாநிலத்தின் Hunter Valley வட்டாரத்தில் பேருந்து விபத்து. அதில் பயணம் மேற்கொண்டவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வீடு திரும்பியவர்கள் என்று கூறப்படுகிறது.

அந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.25 பேர் படுகாயமடைந்தனர்.

பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டதால், அதனடியில் சிலர் மாட்டியிருக்கலாம். அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.