Singapore News in Tamil

சிங்கப்பூரில் உள்ள பொது பூங்காவில் உரிமம் இல்லாமல் தங்கிய நபர் மீது சட்ட நடவடிக்கை!

சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் ஒதுங்குமிடத்தில் 46 வயதுடைய Jackson Chan Kian Leng என்பவர் தங்கி வந்துள்ளார்.பூங்காவுக்கு வருபவர்களால் அந்த தங்குமிடத்தை உபயோகிக்க முடியவில்லை என்று தேசிய பூங்கா கழகம் கூறியது. அவருக்கு உதவ அளிக்கப்பட்டது ஆனால், அவர் அதனைத் தொடர்ந்து நிராகரித்துள்ளார்.

அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தேசிய பூங்கா கழகம் கூறியது.

பொது பூங்காவில் உரிமம் இன்றி தங்கியதற்கும்,பூங்காவின் ஒதுங்குமிடத்தில் புகைப்பிடித்தலுக்கும் மே 30-ஆம் தேதி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவருக்கு 1,400 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.அதனை அவர் கட்ட தவறியதால் 4 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜூன் 2020-ஆண்டில் Jackson குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு வந்ததாக தேசிய பூங்கா கழகமும் சமுதாய, குடும்ப மேம்பாடு அமைச்சகமும் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் jackson நிலைமை குறித்து தெரிவித்தது.

ஆரோக்கியமாக இருக்கும் jackson, அமைப்புகளின் ஆதரவை ஏற்க மறுத்தார்.

“அவர் எங்களுக்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை.அவரை அணுகிய அதிகாரிகளிடம் சரியாக பேசவில்லை.ஒரு பாதுகாப்பு அதிகாரி மீது தண்ணீர் ஊற்றி உள்ளார் ´´ என தேசிய பூங்கா கழகமும், சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சகமும் தெரிவித்தன.