அமெரிக்காவில் சுமார் 90,000 டாலருக்கு விற்பனையான Cheeto தின்பண்டம் ..!!

அமெரிக்காவில் சுமார் 90,000 டாலருக்கு விற்பனையான Cheeto தின்பண்டம் ..!!

அமெரிக்காவில் பிரபல ஜப்பானிய போகிமான் கதாபாத்திரமான சாரிசார்டைப் போன்ற வடிவிலான Cheeto தின்பண்டம் சுமார் $90,000 (சுமார் 119,000 வெள்ளி) டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

Cheetozard என்று அழைக்கப்படும் அந்த காரமான சிற்றுண்டி சுமார் 7 சென்டிமீட்டர் நீளமானது மற்றும் போகிமான் அட்டையுடன் கூடிய சிறப்புப் பெட்டியில் வந்தது.

இந்த அரிய சிற்றுண்டி 2018 மற்றும் 2022 க்கு இடையில் ஒரு விளையாட்டு நினைவுப் பொருள் நிறுவனத்தால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இது கடந்த ஆண்டு (2024) சமூக ஊடகங்களில் பிரபலமடைந்ததாக ஏலத்தை நடத்திய கோல்டின் நிறுவனம் தெரிவித்தது.

பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் $250க்கு ஏலம் தொடங்கியது. ஆனால் அதன் மதிப்பு விரைவாக 5 இலக்கக் குறியைத் தாண்டியதாக கோல்டின் நிறுவனம் குறிப்பிட்டது.

பிரபல போகிமான் கதாபாத்திரமான சாரிசாட் ஏலத்தில் அதிக தொகையில் விற்பனையானதன் மூலம் மக்களிடையே இந்த கதாபாத்திரம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை காட்டுகிறது.