“பொதுமக்கள் மோசடி சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்” – திரு.வோங்

“பொதுமக்கள் மோசடி சம்பவங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்” - திரு.வோங்

சிங்கப்பூர்: பிரதமர் லாரன்ஸ் வோங், கிரிப்டோகரன்சி மற்றும் பணம் சம்பாதிக்கும் திட்டங்களை விளம்பரப்படுத்துவது போன்ற போலி வீடியோக்கள் மற்றும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

திரு.வோங் இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிலர் தனக்கு நேரடியாகத் தகவல் தெரிவித்ததாகவும், சில போலி வீடியோக்கள் மற்றும் படங்களை தான் ஆன்லைனில் பார்த்ததாகவும் கூறினார்.

பொதுமக்கள் இதுபோன்று வெளிவரும் காணொளியை கண்டு மோசடிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் தனிப்பட்ட விவரங்களை யாருக்கும் தெரிவிக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு
திரு.வோங் வலியுறுத்தினார்.

மேலும் மோசடி தொடர்பான புகார்களை https://www.scamshield.gov.sg/ என்ற பக்கத்தில் தெரிவிக்கலாம் என்று கூறினார்.