வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு ஓர் இன்பச் செய்தி!!

சிங்கப்பூரில் இந்த மாத இறுதிக்குள் சுமார் 2000 வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு தேவையான தங்கும் வசதிகள் தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தங்கும் வசதிகள் 5 இடங்களில் அமைக்கப்படும்.
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் Hazel Poa தங்கும் விடுதிகள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.
சுகாதார அமைச்சர் Ong Ye Kung அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
வெளிநாட்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் பொதுச் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளில் வேலை செய்வர்.
அவர்களுக்கான தங்கும் விடுதி வசதிகளை சுகாதார அமைச்சகமும் MOH Holdings உம் தயார் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
இது ஊழியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதை எளிதாக்குகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan