
சிங்கப்பூர் சுகாதார துறை அமைச்சர் ஓங் யீ காங் அமெரிக்க வர்த்தக சபை நடத்திய சுகாதார பராமரிப்பு துறைக் கலந்துரையாடலில் மூன்று அம்சங்களைக் குறிப்பிட்டார்.
அமெரிக்க வர்த்தக சபையுடன் இணைந்து சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு துறையை மேலும் துடிப்பானதாக செயல்பட முடியும் என்று அமைச்சர் கூறினார்.
முதலாவது, எதிர்கால ஆரோக்கிய செயலிகளை எளிதாக்குவது.
செயலிகள் தனிநபர்கள் நல்ல சுகாதார பழக்கங்களை பின்பற்ற உதவும்.
2-வது துல்லிய மருத்துவம்.
ஒவ்வொரு நபரின் மரபணுவும் வித்தியாசமாக இருப்பதால்,அவர்களின் உடல்நலப் பிரச்சனைகளும் வித்தியாசமாக இருக்கும்.
அதன் அடிப்படையில் சிகிச்சை அல்லது ஆலோசனை வழங்கப்படும்.
மூன்றாவதாக,எதிர்காலக் கிருமிப் பரவலைச் சமாளிக்க தயாராக இருப்பதில் அமெரிக்க வர்த்தக சபையும்,சிங்கப்பூரும் இணைந்து செயல்படும் என்று கூறினார்.