ரஷ்யாவின் ஆற்றங்கரையில் மிதந்த 2 சூட்கேஸ்கள்..!!! திறந்தவுடன் காத்திருந்த அதிர்ச்சி...!!!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள ஆற்றில் இறந்த மனிதனின் உடல் பாகங்கள் அடங்கிய இரண்டு சூட்கேஸ்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஒரு பெட்டியில், இறந்தவர் உடலின் மேற்பகுதிகள் ஒரு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் உள் உறுப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
மற்றொரு பெட்டியில் உயிரிழந்தவரின் தலை, கைகள் மற்றும் கால்கள் இருந்துள்ளது.
உடலைப் பரிசோதித்த அதிகாரிகள், தலை, கன்னங்கள் மற்றும் தாடை பகுதியில் பலத்த காயங்கள் இருந்ததாகத் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
எனினும் அவர் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு நிறம் கொண்ட இரு பெட்டிகளை இருவர் ஆற்றின் மேல் உள்ள பாலத்திற்கு எடுத்துச் செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த கொடூரச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
உடல் உறுப்பு கடத்தல் அல்லது
நரமாமிசத்திற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.
Follow us on : click here