மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய ஊழியரணி, குடும்பம் குறித்த ஆய்வு!!

சிங்கப்பூரில் ஊழியரணி,குடும்பம் குறித்த விரிவான ஆய்வு மார்ச் மாதம் மூன்றாம் தேதி தொடங்கியது.
அந்த ஆய்வு ஜூலை 31ம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆய்வை மனிதவள அமைச்சகத்தின் மனிதவள ஆய்வு, புள்ளிவிவரத்துறை, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சிங்கப்பூர் புள்ளிவிவரத்துறையும் நடத்துகின்றன.
சிங்கப்பூரின் மக்கள் தொகை மற்றும் சமூக பொருளாதார பண்புகள் போன்றவைகளை ஆய்வு செய்வதற்கான தகவல்கள் சேகரிக்கப்படும்.
மக்களின் கல்வி,வேலை விவரம்,மொழி அறிவு மற்றும் வேலைக்கு பள்ளிக்கு செல்வதற்கான போக்குவரத்து ஆகியவற்றின் தகவல்களும் சேகரிக்கப்படும்.
கொள்கைகளை மறு ஆய்வு செய்யவும் சமூகத்திற்கான சேவைகள் மற்றும் திட்டங்களை வகுக்கவும் இந்த ஆய்வுகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆய்விற்காக தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மனித வள அமைச்சகம் கடிதம் அனுப்பும்.
அதில் உள்ள இணையதள பக்கத்தில் தேர்வு செய்யப்பட்ட குடும்பங்கள் அவர்களது தகவல்களை பதிவு செய்யலாம்.
Follow us on : click here