உடலில் இன்சுலின் சுரப்பியை அதிகரிக்கச் செய்யும் இயற்கை உணவுகள்…!!!

உடலில் இன்சுலின் சுரப்பியை அதிகரிக்கச் செய்யும் இயற்கை உணவுகள்...!!!

இன்றைய காலகட்டத்தில் நாம் பின்பற்றும் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறைகள் சர்க்கரை நோய் உண்டாக்க வழி வகுக்கிறது. இந்த நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், அதை வாழ்நாள் முழுவதும் நாம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

நாம் உண்ணும் துரித உணவுகள் உடலுக்குள் சர்க்கரையாக மாற்றமடைகின்றது.இந்த சர்க்கரையை உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் கொண்டு செல்லும் வேலையை இன்சுலின் என்ற ஹார்மோன் செய்கிறது. இந்த ஹார்மோன் கணையத்தில் சுரக்கிறது. நமது உடலில் இன்சுலின் சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால், உடலில் இரத்த சர்க்கரை அளவானது அதிகரிக்கத் தொடங்கும். இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறோம். இந்த இன்சுலின் சுரப்பை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.

இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்:

வெந்தயம்

இதில் உள்ள அமினோ அமிலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. தினமும் காலையில் ஒரு டம்ளர் வெந்தயத் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.

கொய்யா

தினமும் ஒரு பச்சை கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், கணையத்தில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். அதேபோல் கொய்யா இலை தேநீர் பருகி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

பாகற்காய்

தினமும் காலையில் ஒரு கிளாஸ் பாகற்காய் சாறு குடிப்பதால் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் இயற்கையாகவே இன்சுலினை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. தினமும் ஒரு டம்ளர் இலவங்கப்பட்டை உட்கொள்வது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

மஞ்சள் தூள்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

மத்தி மீன்

இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும்.

பாதாம்

தினமும் ஐந்து ஊறவைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

கோவைக்காய்

நார்ச்சத்து நிறைந்த கோவைக்காய் உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. தினமும் கோவைக்காய் ஜூஸ் பருகி வந்தால் மாத்திரை இல்லாமல் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.